கதைச் சொல்ல ஆசைதான்
கதை தொடுக்கவும் ஆசைதான்
படித்தப்பின் எல்லோரும் பாராட்ட ஆசைதான்
பாராட்டியவர் பிறர்க்கு எடுத்துரைக்க ஆசைதான்

மைகொண்டு சகாப்தம் படைக்க ஆசை
புத்தகத்துள் பதிவு செய்ய மிக்க ஆசை
விழாவிற்கும் மாலைக்கும் ஆசைதான் 
பணத்திற்கும் பெருமைக்கும் ஆசையோ ஆசைதான்

இதுவும் ஆசை அதுவும் ஆசை
இந்த கற்பனையும் நிறைவேற ஆசைதான்
இந்த கற்பனைக்குமுன் அந்த ஆசைகளுக்குமுன் 
ஒருவரியேனும் எழுத ஆசைதான்