கிளையில் உட்கார்ந்து காகம் சொல்லிற்று
“நானும் நன்றாக பாடுவேன்” 
அங்கிருந்த இரண்டு குயிலை பார்த்து
“ஆஹா என்ன ராகம், ஓஹோ என்ன தாளம்”
என்று அவையும் தலை அசைத்தன
குயிலின் குரலை காகம் அறியுமோ?
காகத்தின் கரைச்சலை குயில் தான் அறியுமோ?
இதற்கும் அதற்கும் நடுவே தான்
கூட்டமாக கூடும் ஆட்டு மந்தைகளும்
அழகு கழுதைகளும்
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு 
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
வளர்ந்து நிற்கும் மரம்போல் நால்வர்