வாடாத மலரும் குத்தாத முள்ளும்
பேயாத மழையும் வெளுக்காத வெய்யிலும்
சுடாத நெருப்பும் அணையாத வெளிச்சமும்
இயற்கை அல்லவே! அது போலத்தான்
துஞ்சிய விழிகளும், தவிக்காத மனமும்
உன்னை மறந்த நெஞ்சமும்
உன் அன்பற்று வாழும் வாழ்க்கையும்
இதற்கு மேலும் சொல்வேன்,
காகிதத்தில் இடமில்லை,
பேனாவில் மையில்லை
முடிவில்லா ஆசைக்கு வரையறையும் இல்லை