ரகசிய கனவுகளின் காலம்
அழகிய ஆர்ப்பாட்டங்களை ரசிக்கும் பருவம்
குளிர் இரவில் எச்சில் முத்தங்கள்
பிடித்தும் பிடிக்காத இன்ப உணர்வுகள்
அர்த்த ஜாம தூக்கம் பிடிக்காமல்
ஜன்னலுடன் விரல் விளையாட்டு
பேசியும் பேசாமலும் ஆரி போன கோப்பைகள்
கோபம் தபம் சண்டைகளும் பூசல்களும்
ஒரு துளி கண்ணீர் விழுவதற்குள்
மனக்கணில் படமாக ஓடிற்று
தனியே படுக்கையில் ஒரு கடைசி மூச்சுக்காற்று
நிசப்தம் மறுபடியும் நிலவியது