நித்தம் வழியும் நெற்றி துளி நீர்
சூரியனின் வெப்ப கோடுகளுடன் தரையில்
செங்கல் சுமந்து காய்ந்து போன தேகம்
சோர்ந்த நிலையில் ஒரு மரத்தடியில்
கேப்பாங்கூழையும் பச்சை மிளகாயையும்
ஏந்திய ஒரு காரிகை கருவிழியாள்
உதட்டில் ஒரு புன்சிரிப்பு
மனதில் ஒரு புளங்ககிதம்
அந்த நிமிடத்தில் ஒன்று கூடிய
அந்த உணர்ச்சி பறிமாற்றத்தை
ஒரு அம்பிகவதியும் அமராவதியும் மிஞ்சிவிடமுடியாது