ஒரு கணம் தொண்டை அடைத்தது
ஓவென்று அழவேண்டுமாய் இருந்ததே
என்ன ஒரு வாழ்க்கை?
முடிவில்லா துன்பமாய்
ஒட்டுமொத்த உலகமே திரண்டு வந்து
சதி திட்டம் தீட்டியதோ?
என்றும் குமுறி குமுறி சோர்ந்த பின்
இருளினும் வெளிச்சமாய்
வெள்ளத்தினுள் படகாய்
ஒளிமயமான சூரியன், அதோ அங்கு தூரத்தில்
கனவா இல்லை நினைவா என்று புலப்படாத சொர்க்கத்தில்
ஓடோடியது, பிடிக்க முடியாமல் புரிய முடியாமல் தவிக்கிறேன்
நிகழும் மாறுவது எப்பொழுது?