வெப்பத்தை குறைத்து
தாகத்தை தணித்து
ஒவ்வொரு அணுவிலும் கலந்து
எங்கெங்கிலும் ஊடுருவி
குளிர்ந்து, காற்றை அடக்கி
நிசப்தத்தை பரப்பி
விடாபிடியாக,
பெய்து ஓயும் மழை முன்னே
கிளம்பியது மண்வாசனை